மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயிலில் கொடியேற்றம்!

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயில் திருமுலைப்பால் பிரமோற்சவம் கொடியேற்றப்பட்டது.

News image

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயிலில் கொடியேற்றம் - Dinamani

Updated On :21 ஏப்ரல் 2026, 5:59 am

சீர்காழி - சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயில் திருமுலைப்பால் பிரமோற்சவம் கொடியேற்றப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனடியாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இந்த கோயிலில் சிவபெருமான் ஸ்ரீ பிரமபுரீசுவரர், ஸ்ரீ தோணியப்பர் மற்றும் ஸ்ரீ சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் அஷ்ட பைரவர்கள் ஒரே சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.

இங்குள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டியதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெரும் பிரமோற்சவ விழாவில் 2ம் நாள்  திருமுலைப்பால் விழா நடைபெறும்.

 சிறப்பு வாய்ந்த சித்திரை பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் மண்டபத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், முத்துச்சட்டைநாதர், ஸ்ரீ திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய ஸ்ரீ பிரமபுரீசுவரர் பல்லக்கில் வந்து மண்டபத்தில் எழுந்தருள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

அதனையடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட ரிஷபக்கொடி, ஓதுவார்கள் தேவாரம் பதிகம் பாடிட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிட உற்சவ கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்துக்கு மகாதீபாராதனை நடைபெற்றது.

இதில் ஸ்ரீமத் அண்ணாமலை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது கோயில் சிறப்பு செந்தில்,கோயில் சூப்பிரண்டு தியாகராஜன், நகர் மன்ற உறுப்பினர் வள்ளி முத்து மற்றும் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.