தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சீர்காழி பிரதான வீதிகளில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, பொதுமக்கள், மாணவர்கள் என முதல்வருடன் கைகுலுக்கி சுயபடம் எடுத்துக் கொண்டனர்.
சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் இன்று(ஏப். 7) மாலை சீர்காழியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தேநீர் கடையில் முதல்வர் ஸ்டாலின். - படம்: DNS
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று இரவு புதுச்சேரி பிரசாரத்தை முடித்துக் கொண்டு, தமிழக முதல்வர் திருவெண்காட்டில் உள்ள அவரது மாமனார் இல்லத்திற்கு வருகை தந்தார்.
தொடர்ந்து, இன்று காலை சீர்காழி தென்பாதி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் இருந்து நடைப்பயிற்சியை தொடங்கினார். அங்கு உள்ள உழவர் சந்தைக்கு மு. க. ஸ்டாலின் சென்று, காய்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் விற்பனை குறித்தும் அவர்களுக்குள்ள குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

சீர்காழி டீக்கடையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு . மாணவிகளுடன் கலந்துரையாடினார். தினமணி நாளிதழ் வாசிக்க வைக்கப்பட்டிருந்தது. - படம்: DNS
தொடர்ந்து வழிநெடுகிலும் பொதுமக்கள் மு. க .ஸ்டாலின் உடன் சுயபடம் எடுத்தும் கைகுலுக்கியும் மகிழ்ந்தனர். பின்னர், கச்சேரி சாலை அரசு மருத்துவமனை சாலை, விகாரி மேலவீதி, பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம் ஆகிய சாலைகளின் வழியே மக்களைச் சந்தித்தவாறு நடைப்பயிற்சி செய்தார்.
சீர்காழி அரசு மருத்துவமனை அருகில் கூடியிருந்த மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். நடைப்பயிற்சி மேற்கொண்ட ஸ்டாலின் சாலையில் இருந்த தேநீர் கடைக்கு திடீரென சென்று தேநீர் அருந்தினார். தேநீர் வழங்கிய ஊழியரிடம் வியாபாரம் எவ்வாறு உள்ளது எனக் கேட்டறிந்தார்.

முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு. - படம்: DNS
அங்கு வந்த மாணவ, மாணவிகள் முதல்வருடன் கலந்துரையாடி சுயபடம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, அங்கிருந்த மக்களிடம் கலந்துரையாடினார்.
சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகளைப் பார்த்த முதல்வர் மு. க. ஸ்டாலின், தனது நடைப்பயிற்சி நிறுத்தி அவர்களிடம் ஆர்வமாக கலந்துரையாடினார். மேலும், சாலையோரம் இருந்த மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ, சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், நகரச் செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், பஞ்சு குமார், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் உடன் இருந்தனர்.
Summary
As Tamil Nadu Chief Minister M.K. Stalin went for a morning walk along the main streets of Sirkazhi, members of the public and students shook hands with him and took selfies.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விராலிமலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

நாகை: வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளா்கள்

மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின்!
குமரி கடற்கரையில் நடைப்பயிற்சி: மக்களிடம் வாக்கு சேகரித்த மு.க. ஸ்டாலின்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



