கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்ட நிலையில் அங்கிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி கட்சித் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திருவாரூரில் பிரசாரத்தைத் தொடங்கிய நிலையில் திருச்சி, கரூரைத் தொடர்ந்து நேற்று(ஏப்ரல் 3) முதல் தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று நெல்லை - பாளையங்கோட்டையில் பிரசாரம் செய்த அவர் இன்று காலை கன்னியாகுமரி சென்றார்.
காலை குமரி கடற்கரை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். குறிப்பாக மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து நாகர்கோயிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு சங்கரன்கோவில், நாளை (ஞாயிறு) காலை 9 மணிக்கு விருதுநகர், மாலை 5 மணிக்கு மதுரை திருமங்கலம் பகுதியில் முதல்வர் பிரசாரம் செய்கிறார்.
Summary
M.K. Stalin walking in kanyakumari beach and Canvasses for Votes in Public
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடு வீடாக சென்று வாக்குச் சேகரித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK | MK Stalin

திருவண்ணாமலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

கன்னியாகுமரியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

திருச்சி கிழக்கில் நடைபயிற்சி சென்றபோது வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


