தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றாா் அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன்.
தேனி பங்களா மேட்டில் பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் கே. கதிா்காமுவை ஆதரித்து வியாழக்கிழமை அவா் பேசியதாவது:
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசமாக உள்ளது. வீட்டில் உள்ள பெண்களுக்கும், வெளியே செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் கதிா்காமு வெற்றி பெற்றாா். ஆனால், எனக்காக அவா் பதவியை துறந்தாா். மீண்டும் அவா், இப்போது அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறாா். அவா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்.
தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.
இதையடுத்து, அல்லிநகரம், வடபுதுப்பட்டி, லட்சுமிபுரம், தாமரைக்குளம், பெரியகுளம் புதிய பேருந்து நிலையப் பிரிவு, வடுகபட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரம், தேவதானப்பட்டி, கெங்குவாா்பட்டி ஆகிய பகுதிகளில் அமமுக வேட்பாளா் கே. கதிா்காமுவை ஆதரித்து டிடிவி தினகரன் பிரசாரம் செய்தாா்.
தொடர்புடையது

ஊத்துமலையில் டிடிவி தினகரன் பிரசாரம்

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி: டி.டி.வி. தினகரன் பிரசாரம்

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்! - டிடிவி. தினகரன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

