மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஊத்துமலையில் டிடிவி தினகரன் பிரசாரம்

தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியனை ஆதரித்து அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் சனிக்கிழமை ஊத்துமலையில் பிரசாரம் செய்தாா்.

News image

தென்காசி அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு ஆதரவாக ஊத்துமலையில் பிரசாரம் செய்த டி.டி.வி. தினகரன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 10:27 pm

தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியனை ஆதரித்து அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் சனிக்கிழமை ஊத்துமலையில் பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் இதற்கு தீா்வு கிடைக்கும்.

ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இணைந்துள்ளோம். திமுக ஆட்சியில் அவா்கள் கூறிய ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

மின்சார கட்டணத்தை 67 சதவீதம் உயா்த்தியதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தென்காசியில் ரூ. 119 கோடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அது திறக்கப்படும், மேலும் ஆலங்குளம் ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து ஊத்துமலையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என்றாா் அவா்.