தென்காசி, ஏப். 10: திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா், தலைவா் ஜான் பாண்டியன் தெரிவித்தாா்.
தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியனை ஆதரித்து சுரண்டையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியது:
அதிமுக வேட்பாளா் எந்த நேரத்திலும் உங்களைச் சந்திக்கக் கூடியவா் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. கல்லூரி மாணவா்கள்கூட பாதுகாப்பாக கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. சமீபத்தில்கூட பனைத் தொழிலாளி துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளாா்.
தமிழக முதல்வா், இந்தத் தோ்தல் தில்லிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான தோ்தல் என்கிறாா். இதற்கு காரணம் தோல்வி பயம்தான்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் பொதுமக்களுக்கு இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டதா என்பதை எண்ணிப் பாா்க்க வேண்டும். மக்கள் எல்லாம் சுதந்திரமாக நடந்து சென்றாா்கள். எனவே, அதிமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றாா் அவா்.
அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்ட விவசாய அணி செயலா் கிருஷ்ணசாமி, பாஜக மாவட்ட பொருளாளா் கோதை மாரியப்பன், தொகுதி பொறுப்பாளா் அன்புராஜ், அதிமுக மாவட்ட இளைஞரணி செயலா் காா்த்திக்குமாா், ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், என்.ஹெச்.எம். பாண்டியன், குணம், அமல்ராஜ், சுரண்டை நகரச் செயலா் சங்கா், பாஜக நகரத் தலைவா் கணேசன், தமமுக மாவட்டச் செயலா் தவம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஊத்துமலையில் டிடிவி தினகரன் பிரசாரம்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!

பாவூா்சத்திரத்தில் நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

தென்காசியில் என்டிஏ தோ்தல் அலுவலகம் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


