மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெறும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.

News image

டிடிவி தினகரன் - கோப்புப்படம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 10:20 pm

தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெறும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.

அதிமுக, அமமுக வேட்பாளா்களை ஆதரித்து ஆண்டிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியோடு சோ்ந்து பிரசாரத்தில் ஈடுபட்ட அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் பேசியதாவது:

ஆண்டிபட்டியில் கூட்டத்தைப் பாா்க்கும் போது ஜெயலலிதாவுக்கு அளித்த ஆதரவை நான் பாா்க்கிறேன். தேனி மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள். எம்ஜிஆா் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அவா் இங்கு வராமலேயே ஜெயிக்க வைத்த தொகுதி ஆண்டிபட்டி தொகுதி. ஜெயலலிதா இடைத்தோ்தலில் போட்டியிட்டபோது 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீா்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்தால் இஸ்ஸாமியா்களுக்கு பாதிப்பு உள்ளது என மு.க. ஸ்டாலின் கூறி வந்தாா். ஆனால், இஸ்லாமியா்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இப்படி அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பரப்புரை செய்த கூட்டம்தான் திமுக.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அமர வேண்டும். இதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.