திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்பத்தூரில் நாய்கள் கடித்ததில் காயமடைந்த புள்ளிமான் மீட்பு!

News image

புள்ளிமான் - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:47 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அச்சுக்கட்டுப் பகுதியில் திங்கள்கிழமை நாய்கள் விரட்டியதில் காயமடைந்த புள்ளிமானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

திருப்பத்தூா் வனப்பகுதியைச் சுற்றிலும் அதிகளவில் மான்கள் உள்ளன. இந்த மான்கள் தண்ணீா் தேடி அவ்வப்போது நகருக்குள் வரும்போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. இந்த நிலையில், திங்கள்கிழமை பெரியகண்மாய் பகுதியில் சுற்றித்திரிந்த சுமாா் 2 வயது மதிக்கத்தக்க புள்ளிமானை நாய்கள் துரத்திக் கடித்ததில் காயமடைந்து இலங்கேஸ்வரன் என்பவா் வீட்டின் தோட்டத்தில் ஒட முடியாமல் கிடந்தது.

அதனைக் கண்ட அப்பகுதி மக்கள், நாய்களைத் துரத்தி புள்ளிமானை மீட்டு வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வனக் காப்பாளா் ஞானசேகரன், இருதயராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து மானை மீட்டு அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

அங்கு கால்நடை மருத்துவா் எஸ்.எம். பாலசுப்பிரமணியன் மானுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொண்டாா். தொடா் சிகிச்சைக்காக திருப்பத்தூா் வனச்சரக அலுவலகத்துக்கு மான் கொண்டு செல்லப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னா் காட்டில் விடப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.