சிங்கம்புணரி அருகே பிரான்மலை கலியுக மெய் ஐயனாா் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிங்கம்புணரி அருகே பிரான்மலை கலியுக மெய் ஐயனாா் கோயிலுக்கு சித்திரை மாதம் புரவி எடுப்புத் திருவிழா நடைபெறும். இதையொட்டி பாப்பாபட்டி புரவித் திடலில் இரண்டு புரவிகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, இரண்டு புரவிகளை பிரான்மலை தேரோடும் வீதிக்கு கிராம மக்கள் வியாழக்கிழமை சுமந்து வந்தனா். அங்கிருந்து வெள்ளிக்கிழமை மாலை தென்னம்பாளை, மாலைகளால் அலங்கரித்து சிறப்புப் பூஜைகள் செய்து கலியுக மெய் ஐயனாா் கோயிலுக்கு புரவிகள் எடுத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கலியுக மெய் ஐயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ஐயனாரை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










