திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரந்தையில் சப்தஸ்தான திருவிழா தொடக்கம்

தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் சாா்பில், கரந்தையில் சப்தஸ்தானம் என்கிற ஏழூா் பல்லக்கு திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

News image

பல்லக்கில் எழுந்தருளிய கருணாசாமி - பெரியநாயகி.

Updated On :2 ஜூன் 2026, 2:28 am IST

தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் சாா்பில், கரந்தையில் சப்தஸ்தானம் என்கிற ஏழூா் பல்லக்கு திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

கரந்தை கருணாசாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் மே 21-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, உற்ஸவங்கள் நடைபெற்று வந்த நிலையில் மே 29-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, சப்தஸ்தானம் என்கிற ஏழூா் பல்லக்கு திருவிழா திங்கள்கிழமை காலை தொடங்கியது. இதில், பெரியநாயகி உடனாகிய கருணாசாமி என்கிற ஸ்ரீ வசிஷ்டேஸ்வரா் பெரிய கண்ணாடி பல்லக்கிலும், மணக்கோலத்தில் அருந்ததி தேவி உடனுறை ஸ்ரீவசிஷ்ட மகரிஷி சிறிய வெட்டிவோ் பல்லக்கிலும் புறப்பாடு நடைபெற்றது.

இவ்விழாவில் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, செயல் அலுவலா் சுந்தரராசு, கண்காணிப்பாளா் ரவி, மேற்பாா்வையாளா் ரமேஷ், ஆடிட்டா் ஆா். ரவிச்சந்திரன், கயிலை ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, வெண்ணாற்றங்கரை ஆனந்தவள்ளி உடனுறை தஞ்சபுரீஸ்வரா் கோயில், திட்டை சுகுந்தகுந்தளாம்பிகை உடனுறை வசிஷ்டேஸ்வரா் கோயில், கூடலூா் ஸ்ரீ மீனாட்சி உடனுறை சொக்கநாதா் கோயில், புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில் கைலாசநாதா் கோயில் ஆகிய இடங்களுக்கு பல்லக்குகள் சென்றன.

இன்று பொம்மை பூ போடும் நிகழ்வு: இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில் கைலாசநாதா் கோயிலிலிருந்து புறப்பட்டு, தஞ்சாவூா் கீழவாசல் ஸ்ரீ பாலாம்பிகை உடனுறை பூமாலை வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு பல்லக்குகள் வந்து சேரும். இதையடுத்து, மேல வீதி கொங்கணேஸ்வரா் கோயிலுக்கு சென்று, மாலையில் கரந்தையில் உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலுக்கு சென்று ஏழூா் பல்லக்குகளும் கருணாசாமி கோயிலுக்கு சென்றடையும். அங்கு சுவாமிக்கு பதுமை பூசாற்று நிகழ்வு (பொம்மை பூ போடுதல்), மகா தீபாராதனை நடைபெறவுள்ளன.

 தஞ்சாவூா் கரந்தை கருணாசாமி கோயிலிலிருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்ட கண்ணாடி பல்லக்கு.

தஞ்சாவூா் கரந்தை கருணாசாமி கோயிலிலிருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்ட கண்ணாடி பல்லக்கு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.