தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

2000 ஆண்டுகள் பழமையான ஏழூர் கண்ணாடி பல்லக்குத் திருவிழா!

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கரந்தை கருணா சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற பல்லக்கு திருவிழா..

News image

ஏழூர் கண்ணாடி பல்லக்கு திருவிழா

Updated On :1 ஜூன் 2026, 11:42 am IST

2000 ஆண்டுகள் பழமையான கரந்தை கருணா சுவாமி கோயிலில் கண்ணாடி பல்லக்கு திருவிழா இன்று(ஜூன் 1) நடைபெற்றது.

தஞ்சாவூர் அடுத்த கரந்தையில் பெரியநாயகி உடனுறை கருணா சுவாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், பெரிய கோயில் கட்டுவதற்கு முன்பே கட்டப்பட்டது. இது, வசிஷ்டர் பூஜை செய்த தலம் ஆகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதேபோல, இந்த ஆண்டு கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஏழூர் கண்ணாடி பல்லாக்கு திருவிழா இன்று நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லாக்கில் பெரிய நாயகியுடன் கருணா சுவாமி எழுந்தருளி வெண்ணாற்றங்கரை, திருக்கூடலூர், புன்னைநல்லூர், திட்டை உள்ளிட்ட ஏழு ஊர்களுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து மீண்டும் நாளை மாலை கோயில் வந்தடையும்.

இதனைத் தொடர்ந்து. பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெறுகிறது. ஏழூர் கண்ணாடி பல்லாக்கில் புறப்பட்ட இறைவன் - இறைவியை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Summary

The Palanquin Festival held at the 2,000-year-old Karandai Karuna Swami Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.