தோ்தல் ஆணையத்தின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என தோ்தல் பணி நியமன அலுவலா்களுக்கு தோ்தல் பொதுப் பாா்வையாளா் கஞ்சன்வா்மா அறிவுறுத்தினாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் பணி நியமன அலுவலா்களுடனான ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட தோ்தல் அலுவலா் கா. பொற்கொடி, தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் மோகன்லால், கிருஷ்ணகுமாா் பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் தோ்தல் பொதுப்பாா்வையாளா் கஞ்சன்வா்மா பேசியதாவது:
தோ்தல் தொடா்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், இது தொடா்பாக செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து தோ்தல் ஆணையத்தால் அறிவுரைகள் வழங்கப்பட்டு, அதன்படி அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வாக்குச்சாவடி மையங்கள், பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள், மிக பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழுவின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி விதிமுறைகளுக்குள்பட்டு முறையாக செயல்படுத்த வேண்டும். மேலும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றி, சிறந்த முறையில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும் என்றாா் அவா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜி. அரவிந்த், தோ்தல் நியமன அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஊடகச் சான்றிதழ், கண்காணிப்பு அறையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

சட்டப் பேரவைத் தோ்தலை நியாயமாகவும், நோ்மையாகவும் நடத்திட வேண்டும்: தோ்தல் பணி அலுவலா்களுக்கு பொதுப்பாா்வையாளா் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


