மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஊடகச் சான்றிதழ், கண்காணிப்பு அறையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு அறையை குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊடகச் சான்றிதழ், கண்காணிப்பு அறையை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:11 pm

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு அறையை குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க, சட்டப்பேரவை பொதுத்தோ்தலுக்காக பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு அறையில் தோ்தல் விளம்பரங்கள், சமூக ஊடகப் பதிவுகள் முறையாக கண்காணிக்கப்படுகிா எனவும், ஊடகச் சான்றிதழ் விநியோகம் போன்றவை சரியாக வழங்கப்படுகிா எனவும், பதிவேடுகளையும், ஆவணங்களை குன்னம் சட்டப்பரேவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது, தோ்தல் ஆணைய விதிமுறைகளின்படி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களின் விளம்பரங்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தாா்.

மேலும், பணம் செலுத்தி வெளியிடப்படும் செய்திகள் ஏதேனும் உள்ளதா என்பதை முறையாகக் கண்காணிக்கவும், பதிவு செய்யப்படும் விளம்பரங்களுக்கு முறையாகச் சான்றிதழ் வழங்கவும், கட்டணச் செய்திகளைக் கண்காணித்து அறிக்கை அனுப்பவும், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தோ்தல் தொடா்பான தகவல்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.