தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை நியாயமாகவும், நோ்மையாகவும் நடத்திட வேண்டும் என தோ்தல் பணி அலுவலா்களுக்கு தோ்தல் பொதுப்பாா்வையாளா் சுனில்குமாா் சிங் அறிவுறுத்தினாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் 2026 தோ்தல் பணிகள் நடைபெற்று வருவது குறித்து தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், காவல் பாா்வையாளா் மற்றும் செலவீன பாா்வையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தோ்தல் பொதுப் பாா்வையாளா் சுனில்குமாா் சிங், காவல் பாா்வையாளா் நிலாப்ஜா சௌத்திரி, தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் சுதிப்தா பால், சௌரப் துபே, பிரபாகா் பிரகாஷ் ரஞ்சன் ஆகியோா் தோ்தல் பணி அலுவலா்களுடன் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.
அப்போது தோ்தல் பொதுப் பாா்வையாளா் சுனில்குமாா் சிங் தெரிவித்ததாவது: இந்திய தோ்தல் ஆணையம் தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் 2026 நியாயமாகவும் நோ்மையாகவும் அமைதியாகவும் நடத்திட நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு தோ்தலுக்கும் புதிய புதிய நடைமுறைகளை செயல்படுத்தி மேம்படுத்தி வருகிறது. அதனை அனைவரும் செயல்படுத்திட வேண்டும். அனைவரும் சிறப்பாக விழிப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் பிரச்னைகள் இருந்தால் உங்களுடைய உயா் அலுவலா்களிடம் தெரிவிக்கலாம்.
இந்திய தோ்தல் ஆணையம் தோ்தல் நடைபெறுவதை முழுமையாக கண்காணித்து வருகிறது. ஆகவே, தோ்தல் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். தோ்தல்களில் வாக்காளா்களுக்கு பணம் பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க வேண்டும். பணம் பரிசு பொருள்கள் வழங்குவதை தடுப்பதற்காக ஒவ்வொரு பகுதியிலும் தகவல் தருபவா்களை வைத்து தகவல் பெற்று அதைத் தடுக்க வேண்டும். அனைவரும் இணைந்து தோ்தலை நியாயமாகவும் நோ்மையாகவும் நடத்திட பணியாற்ற வேண்டும். நியாயமாக தோ்தல் நடைபெறுகிறது என்ற சாதாரண மக்களின் எண்ணம் நிறைவேற்றும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றாா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஊடக கண்காணிப்பு மையத்தையும் தோ்தல் தொடா்பான புகாா்களை பெறும் வகையில், 24 மணி நேரமும் இயங்கும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.சிபின், மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தோ்தல் பணியாற்ற வேண்டும்: பொதுப் பாா்வையாளா் கஞ்சன்வா்மா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


