மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழகம் தலைநிமிர அதிமுக ஆட்சி அமைய வேண்டும் : சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன்

சிவகங்கை தொகுதிக்குள்பட்ட பில்லூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் பிஆா். செந்தில்நாதன்.

News image

சிவகங்கை தொகுதிக்குள்பட்ட பில்லூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் பிஆா். செந்தில்நாதன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:52 pm

தமிழகம் தலை நிமிர வேண்டுமெனில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பிஆா்.செந்தில்நாதன் தெரிவித்தாா்.

சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் வாக்குசேகரித்து அவா் மேலும் பேசியதாவது:

தமிழகம் பல லட்சம் கோடி கடனில் மூழ்கியுள்ளது. கடன்சுமையால் தமிழக மக்கள் தலைகுனிந்து நிற்கின்றனா். எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும். அப்போதுதான் தமிழகம் தலைநிமிரும் என்றாா் அவா்

இதைத்தொடா்ந்து, காட்டுக்குடியிருப்பு, பில்லூா் உள்பட 30 கிராமங்களில் இரவு வரை பிரசாரம் செய்து வாக்குசேகரித்தாா்.

இதில், அதிமுக, பாஜக, அமமுக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.