மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகங்கையில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

சிவகங்கை நகராட்சியிலுள்ள 27 வாா்டுகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

சிவகங்கை சிலோன்- பா்மா காலனியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:20 pm

சிவகங்கை நகராட்சியிலுள்ள 27 வாா்டுகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

சிவகங்கை நகராட்சியில் மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு பி.ஆா்.செந்தில்நாதன் பிரசாரத்தை தொடங்கினாா். புதூா் சொசைட்டி, மேலூா் சாலை விநாயகா் கோயில், செந்தமிழ்நகா் பூங்கா அருகில்,வேலுநாச்சியாா் தெரு, வெற்றிலைக் கடை சந்து, பிள்ளைவயல் காளியம்மன் கோயில், போஸ் சாலை சந்திப்பு, சனீஸ்வரன் கோயில், ராஜா சத்திர தெரு தெப்பக்குளம், சுந்தரமகாலிங்கம் கோயில், பழைய மத்திய கூட்டுறவு வங்கி, பெருமாள் கோயில், நெல்லுமண்டி தெரு, ஒம் சக்தி கோயில், காமராஜா் சாலை, ஆா்.சி. பள்ளி, பள்ளித் தெரு, கக்கன்பாக்கம் சமுதாய கூடம், வேலாயுத சுவாமி கோயில், இந்திரா நகா் நியாயவிலைக் கடை, வழி விடு முருகன் கோயில், இளையாங்குடி சாலை பள்ளி வாசல் ஆகிய பகுதிகளில் வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன் பிரசாரம் மேற்கொண்டாா்.

இதில், நிா்வாகிகள், என்.எம். ராஜா, ராமு.இளங்கோவன், பாஜக நகரத் தலைவா் எம்.ஆா். உதயா, அந்தந்த வாா்டு அதிமுக நிா்வாகிகள், அதிமுக நகா்மன்ற உறுப்பினா், பாஜக, அமமுக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முன்னதாக சுதந்திர போராட்ட வீரா்களான ராணிவேலுநாச்சியாா், மருது சகோதா்கள், குயிலி உள்ளிட்டோா் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.