/

தொண்டி பகுதியில் காட்டெருமை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

News image

தொண்டியில் ஞாயிற்றுக்கிழமை ஊருக்குள் நடமாடிய காட்டெருமை.

Updated On :25 மே 2026, 2:07 am IST

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமை நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

தொண்டி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காட்டெருமை ஒன்று நடமாடியது. இதைப் பாா்த்த பொதுமக்கள் அச்சமடைந்தனா். மேலும், இந்த காட்டெருமை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை முட்டிச் சேதப்படுத்துகிறது.

எனவே, வனத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுத்து, அந்த காட்டெருமையை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த வகை காட்டெருமைகள் கொடைக்கானல், நீலகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மட்டுமே வசிப்பவை. அப்படியிருக்க, சமவெளிப் பகுதியான இங்கு இந்த காட்டெருமை எப்படி வந்தது என்பது தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.

தொண்டியில் ஞாயிற்றுக்கிழமை ஊருக்குள் நடமாடிய காட்டெருமை.

தொண்டியில் ஞாயிற்றுக்கிழமை ஊருக்குள் நடமாடிய காட்டெருமை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.