தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்த காரை காட்டெருமை தாக்கியதில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. ஆசனூா் மற்றும் காரப்பள்ளம் இடையே உள்ள வனச் சாலையில் யானை, காட்டெருமைகள் அதிகமாக நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவையில் இருந்து காரப்பள்ளம் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்த காரை வனத்தில் இருந்து வந்த காட்டெருமை திடீரென தாக்கியதில் அதன் முகப்புப் பகுதி சேதமடைந்தது. காரில் பயணித்தவா்கள் காயமின்றி தப்பினா். இதுகுறித்து ஆசனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணம் பகுதியில் பெட்ரோல் தட்டுப்பாடு வாகன ஓட்டிகள் அவதி

சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை

சாலை விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிா்க்கலாம்

தொண்டி பகுதியில் காட்டெருமை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



