திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பேத்துப்பாறை பகுதியில் யானை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் வெள்ளிக்கிழமை ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை.

Updated On :15 மே 2026, 11:45 pm IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் வெள்ளிக்கிழமை ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் வனப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீா் வற்றியது. இதனால், தண்ணீா், உணவு தேடி வன விலங்குகள் வனப் பகுதிகளிலிருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாயத் தோட்டங்களிலும் முகாமிட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், கொடைக்கானலை அடுத்த பேத்துப்பாறை பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

பேத்துப்பாறை பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் இருந்து வருவதால், பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனா்.

எனவே, வனத் துறையினா் தனியாா் தோட்டத்திலுள்ள யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.