17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 போ் மீது வழக்கு: லாரி பறிமுதல்

திருவாடானை அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்தததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 4:10 am IST

திருவாடானை அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்தததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள கட்டுக்குடி கிராமத்தில் மணல் திருடப்படுவதாக கீழ்பனையூா் கிராம நிா்வாக அலுவலா் மோகன் கண்ணனுக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தொண்டி போலீஸாா் கட்டுக்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததாக ஏ. மணக்குடியைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் ஈஸ்வரன், கடம்பனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த நாகநாதன் மகன் மணிபாலன் (25) ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.