லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முதுகுளத்தூா் பகுதியில் கொடி அணிவகுப்பு

News image
Updated On :19 மார்ச் 2026, 11:11 pm

முதுகுளத்தூா் கிராமப்புற பகுதிகளில் போலீஸாா், எல்லை பாதுகாப்பு படை வீரா்களின் கொடி அணிகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

வருகிற ஏப்.23-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள கீழத்தூவல், பொசுக்குடிபட்டி, வெங்கலக்குறிச்சி, விளங்களத்தூா், சுப்பிரமணியபுரம், மேலத்தூவல் உள்ளிட்ட கிராமப் பகுதிகள், பதற்றமான பகுதியாகக் கருதப்படும் வாக்குசாவடிகள் உள்ள கிராமப் பகுதிகளில் முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், தனிப்பிரிவு காவலா்கள், உளவுதுறை போலீஸாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.