ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் பவளநிற வல்லி அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை ராகுகால அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவா், அம்மனுக்கு 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாரியூா், சாடல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சீனிவாசன், பவளம் மகளிா் குழுவினா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










