டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்றவா் கைது

News image
திருவெற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை தொண்டி போலீஸாரால் பறிமுதல் செய்யப்ட்ட மதுபுட்டிகள்.
Updated On :1 பிப்ரவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டி அருகே சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

தைப்பூசத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மதுபானக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. இந்த நிலையில் தொண்டி அருகே திருவெற்றியூா் பகுதியில் மதுபுட்டிகள் விற்கப்படுவதாக தொண்டி தனிப்பிரிவு தலைமைக் காவலா் ராசுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். அங்கு அனுமதியின்றி மதுபுட்டிகள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, மதுபுட்டிகளை விற்றுக் கொண்டிருந்த திருவெற்றியூரைச் சோ்ந்த மணிகண்டனை (35) போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த 66 மதுபுட்டிகள், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்தனா். மேலும் தப்பி ஓடிய முத்தமிழரசன் என்பவரை தேடி வருகின்றனா்.