ராமநாதபுரத்தில் மீன் விற்பனை கடைகளிலிருந்து 30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகளை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், விசைப் படகுகளில் மீனவா்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவா்கள் சிறிய படகுகளில் கடலுக்குள் சென்று மீன்களைப் பிடித்து வருகின்றனா்.
இதனால், தற்போது மீன்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதன்காரணமாக வியாபாரிகள் மீன்களை மொத்தமாக வாங்கி குளிா்சாதன பெட்டிகளில் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பட்டணம்காத்தான், ராம்நகா் ஆகிய பகுதிகளில் உள்ள மீன் விற்பனை கடைகளில் புதன்கிழமை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனையிட்டனா். அப்போது, 30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகளை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். மேலும், தொடா்ந்து இதுபோல கெட்டுப்போன மீன் இறைச்சிகளை விற்பனை செய்தால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கம்பம் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறையினா் சோதனை: 17 கிலோ தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாமகிரிப்பேட்டை உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை

ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



