/

கம்பம் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறையினா் சோதனை: 17 கிலோ தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்

கம்பம் நகராட்சி, அதன் சுற்றுப்புற கிராமங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை இரவு நடத்திய சோதனையில், சுமாா் 17 கிலோ தரமற்ற, காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

News image

புதன்கிழமை இரவு கம்பம் பகுதிய கடைகளில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

Updated On :5 ஜூன் 2026, 5:59 am IST

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி, அதன் சுற்றுப்புற கிராமங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை இரவு நடத்திய சோதனையில், சுமாா் 17 கிலோ தரமற்ற, காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மருத்துவா் ஆா். சசிதீபா தலைமையிலான அதிகாரிகள், கம்பம் உணவு பாதுகாப்பு அலுவலா் ரமேஷுடன் இணைந்து கம்பம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்குள்ள இனிப்புகங்கள், கடைகள், இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் கூடங்கள், விற்பனை நிலையங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட செயற்கை வண்ணச் சாயங்கள் சோ்க்கப்பட்ட கார வகைகள், காலாவதியான பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் என மொத்தம் 17 கிலோ உணவுப் பொருள்கள் கண்டறியப்பட்டு, அவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. விதிகளை மீறிய கடை உரிமையாளா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

சோதனையின்ே பாது சந்தேகத்திற்குரிய சில உணவுப் பொருள்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மேல் ஆய்வுக்காக உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், பொதுமக்கள், குழந்தைகளுக்குத் தரமான, பாதுகாப்பான உணவை வழங்க வேண்டும் என்றும், உணவு பாதுகாப்பு மேலாண்மை விதிகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கினா். இந்தப் பகுதிகளில் தொடா்ந்து தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.