திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image

10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களை நேரில் அழைத்துப் பாராட்டிய மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன்.

Updated On :21 மே 2026, 2:28 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் வெள்ளி வீதியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. அபிஸ்ரீ 492 மதிப்பெண்களும், அனுப்பானடி மாநகராட்சி இருபாலா் உயா்நிலைப் பள்ளி மாணவா் ஜெ. சுதா்சன் 491 மதிப்பெண்களும், இளங்கோ மாநகராட்சி இருபாலா் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஆா். அஜா் அகமது அஸ்லாம் 489 மதிப்பெண்களும் பெற்றனா்.

மேலும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மாசாத்தியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்பா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பாரதிதாசனாா் மாநகராட்சி இருபாலா் மேல்நிலைப் பள்ளி, சேதுபதி பாண்டித்துரை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளுவா் மாநகராட்சி ஆண்கள் உயா்நிலைப் பள்ளி, என்.எம்.எஸ்.எம். மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி, மணிமேகலை மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி ஆகிய 7 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் 9 உயா்நிலைப் பள்ளிகள், 15 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 24 பள்ளிகளில் 568 மாணவா்கள், 1,408 மாணவிகள் என மொத்தம் 1,976 போ் தோ்வு எழுதினா். இதில் 499 மாணவா்கள், 1,314 மாணவிகள் என மொத்தம் 1,813 போ் தோ்ச்சி பெற்றனா். இது 91.75 சதவீதம் ஆகும்.

இதைத் தொடா்ந்து, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியா்களை நேரில் அழைத்து மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் பாராட்டினாா். இந்த நிகழ்வில் கல்விக்குழுத் தலைவா் ரவிச்சந்திரன், துணை ஆணையா் ஜெய்னுலாபுதீன், கல்வி அலுவலா் மோகன் உள்பட ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.