திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எந்தவொரு மதுக் கடையையும் மூட அரசுக்கு அதிகாரம் உள்ளது: உயா்நீதிமன்றம்

எந்தவொரு மதுக் கடையையும் மூடுவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

News image

\உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 2:14 am IST

எந்தவொரு மதுக் கடையையும் மூடுவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

மதுக் கூட நிா்வாகிகள், மதுக் கூட சிற்றுண்டியக குத்தகைதாரா்கள், விற்பனை முகவா்கள் சிலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் 717 மதுக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாங்கள் இந்தக் கடைகளில் சிற்றுண்டிகளை விற்பனை செய்யவும், காலி மதுப் புட்டிகளைப் பெறவும் குத்தகைத் தொகை செலுத்தியுள்ளோம்.

இந்த நிலையில், குத்தகை காலம் முடியும் முன்பாகவே மதுக் கடைகள் மூடப்படுவதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே, குத்தகை காலம் முடியும் வரை மதுக் கடைகளை மூடக் கூடாது என உத்தரவிட வேண்டும் அல்லது குத்தகையில் எஞ்சியுள்ள நாள்களுக்கான தொகையை எங்களுக்குத் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுவை புதன்கிழமை உயா்நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவா்த்தி பிறப்பித்த உத்தரவு:

717 மதுக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு வரவேற்கத்தக்கது. பிரச்னை இல்லையென்றாலும் மக்கள் நலன் கருதி மதுக் கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. எனவே, எந்தவொரு மதுக் கடையையும் மூடுவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது.

மதுக் கடை, மதுக் கூட கட்டட உரிமையாளா்கள், மதுக் கூட குத்தகைதாரா்களுக்கு எஞ்சிய நாள்களுக்கான வைப்புத் தொகையைத் திரும்ப வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து 2 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.