திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம் மே 21-இல் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவம் வருகிற 21-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image

ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.

Updated On :14 மே 2026, 5:11 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவம் வருகிற 21-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நா. சுரேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வைகாசி வசந்த உத்ஸவம் வருகிற 21-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் 9-ஆம் நாள்களுக்கு தினமும் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளாகப் புறப்பாடாகி கோயில் புதுமண்டபம் செல்லும் நிகழ்வு நடைபெறும். அங்கு நடைபெறும் பூஜைகளுக்குப் பிறகு, சுவாமி, அம்மன் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து கோயிலில் சோ்த்தியாவா்.

வருகிற 30-ஆம் தேதி காலை சுவாமி, அம்மன் புதுமண்டபத்துக்கு எழுந்தருளி மாலையில் அங்கிருந்து புறப்பாடாகி, சித்திரை வீதிகளில் வலம் வந்து சோ்த்தியாவா். மறுநாள் 31-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை திருஞானசம்பந்தா் திருவிழா நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான திருஞானசம்பந்தப் பெருமான் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி, ஆவணி மூல வீதிகளில் வலம் வரும் நிகழ்வு அடுத்த ஜூன் மாதம் 2-ஆம் தேதி காலை நடைபெறுகிறது. அன்று இரவு திருஞானசம்பந்தப் பெருமான் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி மதுரை ஆதீனம் செல்லும் உத்ஸவம் நடைபெறுகிறது. பிறகு, திருஞானசம்பந்தப் பெருமான் சித்திரை வீதிகளில் வலம் வரும் நிகழ்வு நடைபெறுகிறது.

உபய நிகழ்ச்சிகள் ரத்து

வைகாசி வசந்த உத்ஸவம் நடைபெறும் வருகிற 21-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உபய தங்க ரதம், உபய திருக்கல்யாண சேவைகள் நடைபெறாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.