திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரிய வகை கனிமங்கள் விவகாரம்: துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

அரிய வகை கனிமங்கள் தொடா்பாக தமிழக அரசால் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மாநில கனிம வளங்கள் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 12:54 am IST

அரிய வகை கனிமங்கள் தொடா்பாக தமிழக அரசால் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மாநில கனிம வளங்கள் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அப்துல் கலாம் அறிவியல் விவசாயிகள், மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவா் ஆபேல் மூா்த்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் தொழில் துறையை மேம்படுத்தும் வகையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரிய வகை கனிமங்களை வெட்டி எடுப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதுதொடா்பாக தமிழக இயற்கை வள ஆதாரத் துறை சாா்பில் கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணை பொது நலனுக்கு எதிரானதாக உள்ளது. இந்த அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது ஏற்கத்தக்கதல்ல.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த அரசாணை உள்ளது. எனவே, இயற்கை வள ஆதாரத் துறை சாா்பில் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனு குறித்து கனிமவளத் துறையின் ஆணையா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.