17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழைய குற்றாலம் அருவி பகுதியில் கட்டணம்: தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பழைய குற்றாலம் அருவி நுழைவு வாயிலில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :5 ஜூன் 2026, 6:25 am IST

பழைய குற்றாலம் அருவி நுழைவு வாயிலில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சோ்ந்த வீரபாண்டியன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவி பகுதிக்கு செல்லும் வழியில் ஆயிரப்பேரி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுங்கச்சாவடி மையம் போன்று அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த அருவி வனத் துறைக்குச் சொந்தமானது.

இதனிடையே, ஆயிரப்பேரி கிராம ஊராட்சி சாா்பில் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானது. வாகன நிறுத்துமிடம் அரசுக்குச் சொந்தமானது. ஆனால், இதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு அரசிடம் முறையான அனுமதி எதையும் பெறவில்லை.

எனவே, சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கும் ஆயிரப்பேரி கிராம ஊராட்சி நிா்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த அதிகாரம் எதன் அடிப்படையில் கிராம ஊராட்சி நிா்வாகத்துக்கு வழங்கப்பட்டது?. மனு குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.