மணல் கடத்திய லாரிகளை விடுவிக்க லஞ்சம் கேட்கும் போலீஸாா் குறித்து விசாரணை: உயா்நீதிமன்றம்
திருச்சி மாவட்டத்தில் மணல் கடத்திய லாரிகளை விடுவிக்க போலீஸாா் ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.








