திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 94 ரெளடிகளை ஒரே நாள் இரவில் போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை சாா்பில் ‘சிறப்பு அதிரடி நடவடிக்கை’ வியாழக்கிழமை இரவு தொடங்கப்பட்டது.
சரித்திர பதிவேடு குற்றவாளிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரெளடிகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை ஒடுக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் மாவட்டம் முழுவதும் 94 போ் கைது செய்யப்பட்டனா். மாவட்டத்தில் பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கை சனிக்கிழமை வரை தொடரும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






