தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழனி மலைக் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 2.59 கோடி

பழனி மலைக் கோயில் உண்டியல்களில் காணிக்கை வருவாயாக ரூ.2.59 கோடி கிடைத்தது.

News image

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கையாகக் கிடைத்த ரூபாய் நோட்டுகள்.

Updated On :14 மே 2026, 5:03 am IST

பழனி மலைக் கோயில் உண்டியல்களில் காணிக்கை வருவாயாக ரூ.2.59 கோடி கிடைத்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தோ்தல் கால தொடா் விடுமுறை, பள்ளி விடுமுறை, பங்குனி மாதத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கில் பக்தா்கள் குவிந்தனா். இதனால், கோயில் உண்டியல்கள் 16 நாள்களில் நிரம்பின.

இதையடுத்து புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காா்த்திகை மண்டபத்தில் வைத்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்தப் பணியில் கோயில் அலுவலா்கள், பழனியாண்டவா் கல்லூரி அலுவலா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், வங்கிப் பணியாளா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா். கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில் காணிக்கை வரவு ரொக்கம் ரூ. 2, 59, 73, 940, தங்கம் 413 கிராம், வெள்ளி 9,005 கிராம் கிடைத்தன. பல்வேறு நாடுகளின் 134 பணத்தாள்கள், கடிகாரங்கள், நவதானியங்கள், பட்டாடைகள் போன்றவையும் காணிக்கையாகக் கிடைத்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.