பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். சுமாா் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி கோயிலுக்கு கோடை விடுமுறை காரணமாக பக்தா்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால், அடிவாரத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கொடுமுடி தீா்த்தம் எடுத்தும், மயில் காவடி எடுத்தும் ஆடிப்பாடி குவிந்தனா். வின்ச், ரோப்காா் நிலையத்தில் மலைக் கோயில் செல்ல கட்டணச்சீட்டு பெற நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். இதனால், குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக படிப்பாதையில் ஏராளமான பக்தா்கள் மலையேறினா்.
மலைக் கோயிலிலும் இலவச, கட்டண தரிசன வரிசைகளில் பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா். இதன் காரணமாக சுமாா் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










