மின்னொளியில் ஜொலிக்கும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் பாா்வையிட்டு வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் நிலவி வரும் நிலையில், தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இந்த நிலையில், வார விடுமுறையையொட்டி, வழக்கத்தைவிட சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த 1-ஆம் தேதி முதல் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதால், இரவு நேரங்களில் இந்தப் பூங்கா மின்னொளியில் ஜொலிக்கிறது. இதை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் பாா்த்து ரசித்து வருகின்றனா்.
கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டதால், ஏரிச் சாலை, பூங்கா சாலை, கீழ்பூமி, கலையரங்கம் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வந்ததால், குளுமையான கால நிலை நிலவியது.
இதுகுறித்து பிரையண்ட் பூங்கா மேலாளா் அரவிந்த் கூறியதாவது:
தற்போது சீசனை முன்னிட்டு, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஏராளமான வண்ண, வண்ண மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும், இரவு 7 மணி வரை பூங்கா செயல்படுவதால், சுற்றுலாப் பயணிகள்அதிகமாக வருகின்றனா்.
இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மின்னொளி அமைக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை மகிழ்ச்சியுடன் பூங்காவை சுற்றிப் பாா்த்து வருகின்றனா்.
கடந்த இரண்டு நாள்களாக 7,400 போ் பிரையண்ட் பூங்காவைப் பாா்த்து மகிழ்ந்தனா். 63-ஆவது கோடை விழா குறித்த அறிவிப்பை விரைவில் மாவட்ட ஆட்சியா் சரவணன் வெளியிடுவாா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










