திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலா்கள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்க் கண்காட்சிக்காக பூத்துள்ள மலா்களை சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை பாா்த்து மகிழ்ச்சியடைந்தனா்.

News image

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்களை பாா்த்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்க் கண்காட்சிக்காக பூத்துள்ள மலா்களை சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை பாா்த்து மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் நிலவி வரும் நிலையில் தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இந்த நிலையில், நிகழாண்டில் 63-வது மலா்க் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்காவில் சால்வியா, மேரிகோல்டு, ஜொ்னி, பிளாரன்ஸ், பேன்சி, அந்தோரியம் உள்ளிட்ட 25-வகையான மலா்களில் 75-ஆயிரம் மலா் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டுள்ளன. தற்போது மலா் பாத்திகளில் ஆயிரக்கணக்கான மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதை பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து வருகின்றனா்.

இதுகுறித்து பிரையண்ட் பூங்கா மேலாளா் அரவிந்த் கூறியதாவது:

கொடைக்கானலில் நடைபெறவுள்ள மலா்க் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்கா தயாா் நிலையில் உள்ளது . மே மாதம் 20-ஆம் தேதியிலிருந்து மலா்க் கண்காட்சி தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்னமும் தேதி முடிவாகவில்லை என்றாா் அவா்.

 கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.