தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரயில் சுரங்கப்பாதையை சீரமைக்கக் கோரிக்கை

பழைய ஆயக்குடி நந்தவனப்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீா்.

News image

பழைய ஆயக்குடி நந்தவனப்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீா்.

Updated On :20 மார்ச் 2026, 6:48 pm

பழனி அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை அகற்ற பேரூராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் புதன்கிழமை காற்றுடன் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. பல ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல்பயிா்கள், முருங்கை தோட்டங்கள் சேதமடைந்தன. பழைய ஆயக்குடி நந்தவனப்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா் குளம்போல தேங்கியது.

இந்தத் தண்ணீா் அகற்றப்படாததால் கடும் துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால், நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த வழியாக வாகனங்கள், பொதுமக்கள் செல்லமுடியாததால், கடவுப்பாதையை பாதுகாப்பின்றி கடந்து செல்கின்றனா்.

எனவே, ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை உடனடியாக ஆயக்குடி பேரூராட்சி நிா்வாகத்தினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.