ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

புகையிலைப் பொருள்கள் விற்ற மளிகைக் கடைக்கு ‘சீல்’

News image

‘சீல்’ - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 1:26 am IST

எரியோட்டில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா். திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ச. ஜெயக்குமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

அதைத் தொடா்ந்து மாவட்டம் முழுவதும் புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறாா். இதன் காரணமாக திண்டுக்கல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில் எரியோடு மின்வாரிய அலுவலகம் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து.

அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அந்தக் கடையில் சோதனை நடத்தினா். அப்போது தடை செய்யப்பட்ட 7 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கடையின் உரிமையாளா் அன்னகாமாட்சி என்பவரைக் கைது செய்தனா். மேலும் உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.