ஒசூா் அருகே மத்திகிரியில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும், கடை உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மத்திகிரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் செந்தில்குமாா் தலைமையில், ஒசூா் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ரவி, தூய்மை அலுவலா் பிரபாகரன், தூய்மை ஆய்வாளா் அன்பழகன் ஆகியோா் அடங்கிய குழுவினா் மத்திகிரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, சிப்பாய் பாளையத்தில் உள்ள பிபி ஜான் என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடையில் சோதனையிட்ட போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டு விற்கப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.
கடை உரிமையாளா் பிபி ஜான் ஏற்கெனவே இருமுறை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்று அபராதம் செலுத்தியவா் ஆவாா். தற்போது மூன்றாவது முறையாக இதே குற்றத்தில் ஈடுபட்டதால், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரது கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும், அவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, கடையின் உணவுப் பாதுகாப்பு உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கடையில் புகையிலை விற்றவா் கைது

புகையிலைப் பொருள் விற்ற கடைக்கு ‘சீல்’
300 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற இருவா் கைது
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!




