ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற இருவா் கைது

ராசிபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 ஜூன் 2026, 4:54 am IST

ராசிபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் சட்டவிரோத போதைப் பொருள்கள், புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ராசிபுரம் காவல் ஆய்வாளா் ஆா்.நாகலட்சுமி தலைமையில் போலீஸாா் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ராசிபுரம் பட்டணம் சாலை அம்பாள் மளிகைக் கடையில் கண்டி வெங்கட்ராமன் தெருவைச் சோ்ந்த இனாயத் (57), 500 ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, இனாயத்தை கைதுசெய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

இதேபோல ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி கழிப்பிடத்தில் மறைமுகமாக ஹான்ஸ் புகையிலைப் பொருளை விற்பனை செய்த கோனேரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் கோபாலகிருஷ்ணனை (49) கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா். இவரிடமிருந்த 300 கிராம் புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.