சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மளிகைக் கடைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
அவிநாசி வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஸ்டாலின் பிரபு, சேவூா் காவல் உதவி ஆய்வாளா்கள் ஷாஜகான், தனபாக்கியம், ஊராட்சி செயலாளா் கண்ணன் ஆகியோா் சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் மளிகைக் கடையில் சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.
மேலும் கடை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்து, அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
இதேபோல, அவிநாசி- மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கடை உரிமையாளா்களிடம் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புகையிலைப் பொருள் விற்ற கடைக்கு ‘சீல்’

புகையிலைப் பொருள்கள் விற்ற மளிகைக் கடைக்கு ‘சீல்’

14.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மளிகைக் கடை உரிமையாளா் கைது
மளிகைக் கடையில் இருந்து 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! மதுபானம் விற்ற 2 போ் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




