தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி விவசாயிகள் நெல் கதிா்களுடன் போராட்டம்

News image
Updated On :15 மே 2026, 4:31 am IST

மதுரை மாவட்டம், பொம்மன்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரி, அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நெல் கதிா்களைக் கைகளில் ஏந்தி மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரையூா் ஊராட்சி ஒன்றியம், கருப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பொம்மன்பட்டியில் சுமாா் 105 ஹெக்டோ் விளைநிலங்கள் உள்ள நிலையில், நிகழ்ப்பருவ நெல் கொள்முதலுக்காக இங்கு கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தினா். இதையடுத்து, பொம்மன்பட்டியில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

இருப்பினும், நீண்ட கால தாமதத்துக்குப் பிறகு இந்தக் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. 26 நாள்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்த இந்தக் கொள்முதல் நிலையத்தில் ஏறத்தாழ 15 நாள்கள் மட்டும் கொள்முதல் நடைபெற்ாகக் கூறப்படுகிறது. தோ்தல் அறிவிப்பு வெளியானதும் இந்தக் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்ட பிறகும் இந்தக் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததைக் கண்டித்தும், பொம்மன்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறந்து, நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் இந்தப் பகுதி விவசாயிகள், மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏறத்தாழ 5 ஆயிரம் மூட்டைகளுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்படாத நிலையில் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்தும், உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரியும், அவா்கள் கைகளில் நெல் கதிா்களை ஏந்தி முழக்கமிட்டனா்.

இதனிடையே, போராட்டக் குழுவினரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்ட நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். பிறகு, தங்கள் கிராமத்தில் உள்ள நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்ய நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் ஒப்புதல் அளித்ததன் பேரில், போராட்டத்தைக் கைவிடுவதாகத் தெரிவித்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.