காமராஜரின் பெயர் பொறிக்கப்பட்ட அந்த சிலையின் கல்வெட்டு குப்பையில் கிடப்பது வேதனையளிக்கிறது என காங்கிரஸ் பிரமுகர்கள் ஆதங்கப்படுகின்றனர். "நாட்டின் விடுதலைக்காக ஒருவரை மட்டும் மக்களவைக்கு அனுப்பினால் போதும் என்ற ஒரு நிலை வந்தால், நான் அனுப்பும் ஒரே நபர் சத்தியமூர்த்தி' என மகாத்மா காந்தியே குறிப்பிட்ட பெருமைக்குரியவர் தீரர் சந்தியமூர்த்தி. சரளமான பேச்சு, எந்த விஷயமானாலும் துணிந்து தனது கருத்தைக் கூறும் திறன் என்று தலைவருக்கு உரிய தகுதியைப் பெற்றிருந்தவர் தீரர் சத்தியமூர்த்தி. சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்ற இவர், பாரதியார் பாடலுக்கு ஆங்கிலேய அரசு தடைவிதித்த போது அதைக் கடுமையாக எதிர்த்தவர்.