42 ஆயிரம் ஹெக்டேர் நெல் பயிர் கருகும் அபாயம்
திருவாடானை, அக். 21: ரா மநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் 42 ஆயிரம் ஹெக்டேர் நெல் பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் 2-வது நெல் களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் தொண்டி, திருவாடா


திருவாடானை, அக். 21: ரா மநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் 42 ஆயிரம் ஹெக்டேர் நெல் பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் 2-வது நெல் களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் தொண்டி, திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் உள்ளிட்ட 7 பிர்காக்கள் உள்ளன. இதில் சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு உள்ளது. இதில் சுமார் 8 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பளவில் தரிசு நிலங்கள் உள்ளன.
எஞ்சிய பகுதியான 42 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் உள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களில் விவசாயம் நடைபெறுகிறது.
திருவாடானை தாலுகாவில் பாசனத்துக்குப் பொதுப் பணித் துறை பராமரிப்பில் 200 பெரிய கண்மாய்கள், யூனியன் பராமரிப்பில் 300 சிறு கண்மாய்கள் உள்ளன. தமிழகத்தின் 2-வது பெரிய கண்மாய் ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ளது. தற்போது மழை இல்லாமல் அவை வறண்டு காணப்படுகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த சிறு மழையை நம்பி நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் இறங்கினர். சில இடங்களில் பயிர்கள் முளைத்து களைவெட்டும் பணியும் நடைபெற்றுவரும் வேளையில் பருவமழையை நம்பி விவசாயிகள் இருந்த நிலையில் சம்பா பருவ நெல் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்திலே அதிக நெல் உற்பத்தியைத் தரும் பகுதியான திருவாடானை தாலுகா முழுவதும் சுமார் 42 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பளவில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு, விவசாயிகளுக்கு பல கோடி ருபாய் நஷ்டம் அடையும் நிலை உருவாகியுள்ளது.
இதுசம்பந்தமாக திருவெற்றியூர் விவசாயி ராமநாதன் கூறியது:
தற்போது பெய்த சிறுமழையை நம்பி நேரடி நெல் விதைப்பில் இறங்கினோம். மேலும் விவசாயப் பணிகளுக்கென்று சிறு நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். இந்த நிலையில் இன்னும் ஒருசில நாள்களே பயிர்கள் தாங்கும். இந்த நிலை நீடித்தால் பயிர்கள் கருகி அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும். என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...