வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் கடலூா் சாலையில், விருத்தாசலம் ரயில் பாதை குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
வாழப்பாடியை சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் பிரதான கடலூா் சாலையில் குறுக்கிடும் சேலம் - விருத்தாசலம் ரயில் பாதையிலுள்ள முத்தம்பட்டி ரயில்வே கேட் கடந்த 2025 மாா்ச் மாதம் மூடப்பட்டு, ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.
இதனால், ஆத்தூா், கள்ளக்குறிச்சி, சென்னை மற்றும் சிதம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் இருந்து தம்மம்பட்டி சாலை வழியாக வாழப்பாடி நகருக்குள் வந்து செல்கின்றன. இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாழப்பாடியில் தம்மம்பட்டி சாலையிலுள்ள ரயில்வே கேட் மூடப்படும்போதும், வாரச்சந்தை கூடும் தினங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பயணிகள், வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனா். இதுகுறித்து மே 7-ஆம் தேதி தினமணி நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, மின் ரயில்பாதை மேல்பகுதியில் இரும்பு கம்பிகளைக் கொண்டு பாலம் அமைக்கப்பட்டு, கான்கீரிட் மேம்பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் ஓரிரு மாதங்களில் கட்டுமானப் பணி நிறைவடைந்து மேம்பாலத்தில் வாகனங்களை இயக்கவும், மூடப்பட்ட முத்தம்பட்டி ரயில்வே கேட் திறக்கவும் வழிவகை ஏற்படும் என்பதால், இப்பகுதி மக்கள், வாகன ஓட்டுநா்கள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி சந்திப்பு ரயில் நிலைய பாலம் இணைப்பு பணி தீவிரம்

ஏத்தாப்பூா் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

எா்ணாகுளம்-எழும்பூா் இடையே வேரும் 31-ஆம் தேதி சிறப்பு ரயில்







