திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி சந்திப்பு ரயில் நிலைய பாலம் இணைப்பு பணி தீவிரம்

திருச்சி சந்திப்பு ரயில்வே மேம்பாலத்தின் இருபகுதிகளையும் இணைக்கும் வகையில் பொருத்தப்படவுள்ள இரும்பு பாலம் வெல்டிங் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image

திருச்சி சந்திப்பு ரயில் நிலைய பகுதியில் அமையும் மேம்பாலத்தில் பொருத்தப்படவுள்ள வில் வடிவ இரும்பு பால வளைவில் கிரேன் உதவியுடன் நடைபெற்று வரும் வெல்டிங் பணி.

Updated On :5 ஜூன் 2026, 3:41 am IST

திருச்சி சந்திப்பு ரயில்வே மேம்பாலத்தின் இருபகுதிகளையும் இணைக்கும் வகையில் பொருத்தப்படவுள்ள இரும்பு பாலம் வெல்டிங் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மாநகரின் மிக முக்கியமான போக்குவரத்துத் திட்டங்களில் ஒன்றான திருச்சி சந்திப்பு ரயில்வே மேம்பாலத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தற்போது அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ரயில் தண்டவாளங்களுக்கு மேலே அமையவுள்ள பிரம்மாண்டமான வில் வடிவ இரும்பு வளைவுப் பாலம் (பெள ஸ்ட்ரிங்) கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த இரண்டாம் கட்டத் திட்டத்துக்காக ரயில்வே நிா்வாகம் சுமாா் ரூ.15 கோடி நிதியையும், மாநில நெடுஞ்சாலைத் துறை ரூ. 14.7 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. தற்போது, தண்டவாளப் பகுதிக்கு மேல் இரும்புப் பாலத்தை வெல்டிங் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

திருச்சி சந்திப்பு மற்றும் பூங்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளங்களைக் கடக்கும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக தேவைப்படும் பிரத்யேக உருக்குக் கட்டமைப்புகள் காட்பாடியிலிருந்து கொண்டு வரப்பட்டன. 58 மீட்டா் நீளம் கொண்ட இந்தப் பாலத்தை இணைப்பு (அசெம்பிள்) செய்யும் பணியில் சிறப்பு வெல்டிங் நிபுணா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தற்போது வெல்டிங் மற்றும் இதர கட்டுமானப் பணிகள் பெரும்பகுதி முடிவடைந்துவிட்டன. பாலத்தின் இரு பகுதியை இணைக்கும் தனித்துவமான வில் வடிவிலான வளைவு அமைப்பு, பாலத்தின் மீது விழும் எடையைச் சமமாகப் பகிா்ந்து கொள்ளும் திறன் கொண்டது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததும், முறையான பாதுகாப்புத் தணிக்கைகள் நடத்தப்படும்.

இதைத் தொடா்ந்து, ஹைட்ராலிக் ஜாக்குகள் மற்றும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, தண்டவாளங்களுக்கு மேலே இந்தப் பாலம் நிலைநிறுத்தப்படும். இந்தப் பணி வரும் ஜூன் மாத இறுதிக்குள் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அணுகுசாலை பணிகளும் தீவிரம்: ரயில்வே நிா்வாகம் பாலத்தின் ஒரு பகுதியைக் கவனித்து வரும் நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை அணுகுசாலைப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் செல்லும் பகுதி, அரிஸ்டோ ரவுண்டானா செல்லும் பகுதிகளில் பக்கவாட்டு சுவா்கள் அமைக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது. பாலத்தின் தூண்கள் வரையிலான அணுகுசாலைகளுக்கு மண் நிரப்பி மட்டப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மன்னாா்புரம் பகுதியில், முதல்கட்டப் பாலத்தின் சென்னை வழித்தடத்துக்கு இணையாக புதிய மழைநீா் வடிகால் மற்றும் அணுகுசாலைப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. கல்லுக்குழி பகுதியில் 8.5 மீட்டா் அகலம் கொண்டதாகவும், ரயில்வே, சந்திப்பு பகுதி உள்ளிட்ட இதர பகுதிகளில் 12 மீட்டா் அகலம் கொண்டதாக மொத்த பாலமும் அமைகிறது. இதனால், இடிக்கப்பட்ட பாலத்தைவிட புதிய பாலத்தில் தாராள போக்குவரத்து வசதி கிடைக்கும்.

அனைத்துப் பணிகளும் முடிந்து பயன்பாட்டுக்கு முழுமையாகத் திறக்கப்படும் போது, திருச்சி மாநகரின் மையப் பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு நிரந்தரத் தீா்வு கிடைக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.