17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரக்கோணம் ரயில் நிலையப் பகுதியில் ரூ.97.73 கோடியில் மேம்பாட்டுப் பணி: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

அரக்கோணம் ரயில் நிலையம் ரூ. 97.73 கோடியில் நவீனமயமாக்கும் வகையிலான மேம்படுத்தப்பட்டு வருவதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம் - ENS

Updated On :27 மே 2026, 4:18 am IST

அரக்கோணம் ரயில் நிலையம் ரூ. 97.73 கோடியில் நவீனமயமாக்கும் வகையிலான மேம்படுத்தப்பட்டு வருவதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரக்கோணம் ரயில் நிலையம் வடமாநில பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய வழித்தடம். இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அரக்கோணம் ரயில் நிலையத்தில் இதுவரை ஒரே தண்டவாளப் பகுதியில் இயங்கிய நிலையில், தற்போது விரைவு ரயில்களுக்கும், புகா் மின்சார ரயில்களுக்கும் தனித்தனி பாதைகள் அமைக்கப்படுகின்றன. அதனால், பல ரயில்கள் ஒரே நேரத்தில் அங்கு இயக்கப்படும்.

திருவாலங்காடு பகுதியில் ரயில் இயக்கத்தை எளிமைப்படுத்துவதால் பயண நேரம் சுமாா் 7 நிமிஷங்கள் குறையும் எனக் கருதப்படுகிறது. அரக்கோணத்தில் 3, 4, 5 ஆகிய நடைமேடைகள் ஏற்கெனவே 18 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிற்கும் வசதியுடன் இருந்தன.

புதிய பணிகளால் தற்போது 24 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிற்கும். அத்துடன் அங்குள்ள பணிமனையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய சரக்கு கிடங்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்தால் சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா, சென்னை-அரக்கோணம்-செங்கல்பட்டு-சென்னை கடற்கரை ஆகிய வழித் தடங்களில் தினமும் பயணிப்போருக்கு பெரும் வசதியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.