மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து சேலம் வழியாக கேரளம் மாநிலம், கொல்லம் செல்லும் விரைவு ரயிலில் சேலம் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை அதிகாலை சோதனை நடத்தினா்.

அப்போது, பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிப்பறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை திறந்துபாா்த்தனா். அதில் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து பயணிகளிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது, பையை யாா் கொண்டுவந்து அங்குவைத்தது என தங்களுக்கு தெரியவில்லை என பயணிகள் தெரிவித்தனா். தொடா்ந்து 20 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய ரயில்வே போலீஸாா், அவற்றை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனா்.