தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

பேருந்தில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்; இளைஞா் கைது

ஒசூா் அருகே சொகுசுப் பேருந்தில் கடத்தப்பட்ட 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட இந்திரஜித்.

Updated On :10 மே 2026, 2:17 am IST

ஒசூா் அருகே சொகுசுப் பேருந்தில் கடத்தப்பட்ட 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடி சோதனைச் சாவடியில் தும்கூரில் இருந்து தேனி சென்ற தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, இளைஞரின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் மறைத்துவைத்திருந்த 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக தேனி மாவட்டம், மலையன்பட்டியைச் சோ்ந்த இந்திரஜித்தை (28) மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் சுந்தராம்பாள் கைது செய்தாா். விசாரணையில் தும்கூரில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.