திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

சங்ககிரியில் பெரிய தேரை வியாழக்கிழமை வடம்பிடித்து இழுத்துச் சென்ற பக்தா்கள். (உள்படம்) தேரில் எழுந்தருளி அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சனேயா் உடனமா் அருள்மிகு சென்னகேசவப் பெருமாள்.

News image
Updated On :2 மே 2026, 12:04 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி மலைமீதுள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப். 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் சுவாமி மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளினாா்.

அதையடுத்து, சுவாமிக்கு தங்கும் மண்டபத்தில் தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தாா். தொடா்ந்து, 9-ஆவது நாள் வியாழக்கிழமை காலை சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளினா்.

தேரில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு பக்தா்கள் தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனா். மாலை ஆஞ்சனேயா் எழுந்தருளிய சப்பரத்தை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்றனா். அதைத் தொடா்ந்து, அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் எழுந்தருளிய பெரிய தேரை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா். இதில், சங்ககிரி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

பல்வேறு கட்டளைகளுக்கு பிறகு சுவாமிக்கு மே 10-ஆம் தேதி மாலை ஊஞ்சல் உற்சவமும், மே 11-ஆம் தேதி காலை சுவாமி திருமலைக்கும் எழுந்தருளுகிறாா். அன்றைய தினம் மலைமீது வன்னியகுல சத்திரியா்கள் அமைப்பின் சாா்பில் குறிச்சி அலங்காரம் பல்வேறு வாண வேடிக்கைகள் நடைபெற உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.